பெரும்பாக்கம் கல்லூரி – இது பெருமை சேர்க்கும் கல்லூரி அரசு தந்த கல்லூரி – நல்ல பாதை காட்டும் கல்லூரி கோடை மேகம் போலவே – ஒரு போதி மரமாகவே – எங்கள் கருப்பு இரவின் விடியல் -இது சதுப்பு மண்ணின் புதையல்.
சரணம் 1
தேடல் கொண்ட உள்ளம் எல்லாம் சேர்ந்து பயில வரலாம் – புதுப் பாதை தேடும் கால்கள் எல்லாம் பயணம் தொடங்க வரலாம் திசைகள் வெல்லும் பறவைக்கெல்லாம் கல்வி என்னும் சிறகுதரும் ஆயிரம் கனவுகள் அடைகாத்திடவே அன்பால் பின்னிய கூடுதரும் காட்டு வெள்ளம் கட்டுப் படுத்தும் இதுவே நமது நதிக்கரை வாழ்க்கை பெரிய போர்க்களம் என்றால் இதுதான் நமது பாசறை சமூகம் மேம்படத் தூண்டும் – நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும். (பெரும்பாக்கம் கல்லூரி…)
சரணம் 2
இன்றைய துயரம் ஏனென்று அறிய நேற்றைய பாடம் பயில்வோமே நாளைய பொழுது நன்மையில் முடிய விலங்குகள் நொறுங்க எழுவோமே வழிகள் ஆயிரம் முன்னே உண்டு விழியைக் கல்லூரி திறக்கும் புன்னகை பூக்கள் நம்மில் மலர வேராய் நாளும் உழைக்கும் அரசு தந்த அமுத சுரபி – இது உப்பு நலத்தின் முத்து குவித்து வைத்து நமக்கு வழங்கும் அறிவே நமது சொத்து – இது சமூகம் மேம்படத் தூண்டும் – நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும். (பெரும்பாக்கம் கல்லூரி…)